2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய போதைப்பொருள் விற்பனை நிலையம் நேற்று மாலை (10) முற்றுகையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, அந்த நிலையத்தை நடத்தியவர் எனத் தெரிவிக்கப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரும் போதைப் பொருளை கொள்வனவு செய்ய வந்த 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் கூறினர்.

இதன்போது, அங்கிருந்து பெருமளவிலான மாவா போதைப்பொருளும், மாவா போதைப் பொருளை தயாரிப்பதுக்கான மூலப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

குறித்த நிலையத்தால் தினமும் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .