Janu / 2026 ஜனவரி 14 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்த ஒருவர் , பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு அவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
போதனா வைத்தியசாலைக்கு புதன்கிழமை (14) அதிகாலை 1.40 மணியளவில் நிறை போதையில் இரத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் தாதியர்களிடம் முரண்பட்டு , தூஷண வார்த்தைகளை பேசி , ஏனைய நோயாளர்களுக்கும் சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு, விரைந்து குறித்த நபரை கட்டுப்படுத்த முயன்ற நிலையில் குறித்த நபர் தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து , அச்சுறுத்தியுள்ளார்.
பின்னர் அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட போது குறித்த நபர் தாக்கியதில் ஒரு உத்தியோகத்தருக்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிதர்ஷன் வினோத்
42 minute ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
7 hours ago
16 Jan 2026