Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சண்முகம் தவசீலன் / 2018 ஜூலை 23 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எமது போராட்டம் முடியவில்லை எனத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எமது போராட்ட வடிவமே மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
அத்துடன், எமது உறவுகளுக்கு முடிவு கிடைத்தப் பின்னரே, எமது போராட்டம் முடியும் எனவும் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், வலிந்து காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி, கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்புப் போராட்டமானது, கடந்த 18ஆம் திகதி 500 ஆவது நாளில் அந்த இடத்தில் முடிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (23) காலை 10 மணியளவில், மாங்குளம் வீதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில், தமக்கான அலுவலகத்தைத் திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்கள்,
“அது எமது போராட்ட முடிவல்ல. அந்த இடத்தில் எமக்கு பாரிய சிக்கல்கள் இருந்தது. எனவே, அந்த இடத்தில் எமது போராட்டத்தை நிறுத்தி, மாற்றுவழியில் போராட முடிவெடுத்தோம். அதன்விளைவாக, எமக்கான அலுவலகம் ஒன்றை அமைத்து அதில் இருந்து போராடுகிறோம்.
“எமது போராட்டம் எமது உறவுகள் கிடைத்தாலே அன்றி, வேறு காரணங்களுக்காக நிறுத்தப்படாது. காலத்துக்கு காலம் வடிவங்களை மாற்றி போராடிக்கொண்டே இருப்போம்” என, அவர்கள் மேலும் தெரிவித்தனர்
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025