Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
கண்டி - பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி என போலியான ஆவணங்களைத் தயாரித்து, நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்பித்த "போலி ஆவணங்கள் ஆசாமி" யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், போலி ஆவணங்களைத் தயாரித்து அவற்றைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில், யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்பு பொலிஸாரால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியமை என தனித்தனியே இரண்டு வழக்குகள் சந்தேக நபருக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டன.
சந்தேக நபர், கடந்தாண்டு குறித்த வழக்குத் தவணைக்கு முன்னதாகவே தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸாரின் இணக்கத்துடன் நகர்த்தல் பத்திரத்தை இணைத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகி, சில ஆவணங்களைச் சமர்ப்பித்து குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதாகவும் வழக்குகளிலிருந்து விடுவிக்குமாறும் விண்ணப்பம் செய்தார்.
கண்டி - பேராதனை பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் படிப்பை நிறைவு செய்து அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாகவும் தான் உள்ளதாக ஆவணங்களை அவர் சமர்ப்பித்தார்.
அத்துடன், அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பேராதனை பல்கலைகழகத்தின் பதிவாளர் என ஒருவரும் சான்றுப்படுத்தியிருந்தார்.
சமானதான நீதிவான், பல்கலைகழக பீடாதிபதி, பேராசிரியர் என பல்வேறு ஆவணங்களை ஆராய்ந்த நீதிமன்று, வழக்குத் தொடுனரான பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காத்தால், சந்தேக நபரை வழக்குகளிலிருந்து விடுவித்தது.
இந்த நிலையில், அந்த வழக்குகள் தவணையிடப்பட்ட திகதியில், வழக்குகள் பொலிஸாரின் இணக்கத்துடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை தெரியவந்தது.
பல்வேறு முயற்சிகள் எடுத்த போதும் மோசடியாளருக்கு நடவடிக்கை எடுக்க முடியாததால், குறித்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள், பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாக (Tell the IGP) இணையவழியில் முறைப்பாட்டை வழங்கியிருந்தனர்.
அதனை ஆராய்ந்த பொலிஸ் மா அதிபர், வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய, சந்தேக நபர், கடந்த திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்ட போது, அவரை ஏப்ரல் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
7 hours ago
02 May 2025