2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மாணவர்களுக்கு புகைப்பொருட்களை விற்றவர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 29 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பாடசாலை மாணவர்களுக்கு புகையிலை மற்றும் சிகரெட் என்பவற்றை விற்பனை செய்த தேநீர்க் கடை உரிமையாளரை, நேற்று  வியாழக்கிழமை (28) கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதி பகுதியில் உள்ள சைவ உணவகத்தில் பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்பதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைக்பெற்றிருந்தது.

இதனையடுத்து சிவில் உடையில் சென்ற பொலிஸார் தேநீர் கடையின் பின்பக்கம் சென்று பார்த்த போது, பாடசாலை மாணவர்கள் சிகரெட் புகைப்பிடிப்பதனைக் கண்டுள்ளனர்.

இது தொடர்பில் அக்கடை உரிமையாளருக்கும் பாடசாலை மாணவன் ஒருவனுக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X