2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மே தினத்திலும் வீடியோ எடுத்த பொலிஸார்

George   / 2017 மே 02 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு திங்கட்கிழமை (01) இடம்பெற்ற போது, போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களை, பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார் வீடியோ எடுத்தனர்.

தொழிலாளர் தின நிகழ்வு சாவகச்சேரியிலுள்ள வார்வனநாதர் சிவன் கோவில் முன்றலில் திங்கட்கிழமை (01) மாலை இடம்பெற்றது.

இதன்போது, அங்கு கடமையிலிருந்த பொலிஸ் பரிசோதகர், பேரணியில் கலந்து கொண்டவர்களை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

வட மாகாணத்தில் இடம்பெறும் போராட்டங்களின் போது, பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X