2025 ஜூலை 23, புதன்கிழமை

மாநகர சபைக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும்

Kogilavani   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  எஸ்.ஜெகநாதன்

'யாழ்ப்பாணம் மாநகரக்குப்பட்ட பகுதிகளில் மோசமான சுகாதார சீர்கேடுகள் காணப்படுகின்றன. இதனை மாநகர சபை கவனத்தில் எடுத்து சீர்செய்யாவிட்டால் மாநகர சபை மீது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய ணே;டிய சூழ்நிலை ஏற்படும்' என வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை (18) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில்,
'சில பொதுச் சுகாதார பரிசோதகர் ஒவ்வொரு இடங்களில் ஒருவிதமாக நடந்துகொள்கின்றனர். சில இடங்களில் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்து, சின்ன விடயங்களுக்கும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்கின்றனர். ஆனால் சில இடங்களில் அதிகளவான தளர்வுகளை வழங்கி வருகின்றனர். இதனை அவர்கள் தவிர்க்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .