2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மேம்பாலம் அமைத்துத் தருமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 09 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காய் கோட்டைகட்டியகுளத்தின் வான் வெள்ளம் துணுக்காய் -அக்கராயன் வீதியைக் குறுக்கறுத்துப் பாய்வதால், அப்பகுதி வெள்ள இடர் மிகுந்த பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலர், பிரதேச செயலர் கலந்துகொண்ட கூட்டத்தில் கோட்டைகட்டியகுளத்திலிருந்து வான் வெள்ளம் பாய்கின்றபோது போக்குவரத்து தடைப்படுகிறது. இந்நிலையில், வீதியைக் குறுக்கறுத்துப் பாய்கின்ற இடத்தில் மேம்பாலம் அமைத்துத் தருமாறு கோட்டைக்கட்டியகுளம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது கோட்டைகட்டியகுளம் வான் வெள்ளம் பாய்வதன் காரணமாக மக்கள் போக்குவரத்து நெருக்கடியை  எதிர்கொண்டுள்ளனர்.

கோட்டைகட்டியகுளம் கிராமம் மற்றும் அதன் அயல் கிராமமான அம்பலப்பெருமாள்குளம் ஆகிய இரு கிராமங்களையும் சேர்ந்த 210 வரையான குடும்பங்கள் மேம்பாலம் அமைக்கப்படாததன் காரணமாக வெள்ளம் பாயும் போது போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .