2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மாற்றுவலுவுடையோர் - மாவட்டச் செயலர் கலந்துரையாடல்

George   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாவட்ட மாற்றுவலுவுடையோர் சுய உதவிக் குழுவினர், யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகனை மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (03) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் மாற்று வலுவுடையோர் சுய உதவிக்குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை மாவட்டச் செயலரிடம் முன்வைத்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலுக்காக வழங்கப்படும் நிதி போதாமையினால் அதனை அதிகரித்தல். மாற்றுத்திறனாளிகளுக்காக அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களில்;   நிரந்தர வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கல். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மலசல கூடத்துக்கான நிதியினை அதிகரித்தல். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்தம் 3000 ரூபாய் வழங்க ஆவன செய்தல். மாற்றுத்திறனாளிகளிற்கான சுயதொழில் பயிற்சி நிலையத்தினை யாழ். மாவட்டத்தில் உருவாக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த யாழ். மாவட்ட செயலர், மாற்று வலுவுடையோர் சங்கத்தை வலுப்படுத்தவும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .