Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஜெகநாதன்
வடமாகாணத்தின் மீள்குடியேற்ற தேவைகளை கண்டறிவதற்கான மாவட்ட மட்டத்திலான கூட்டம் 5 மாவட்டங்களிலும் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், மீள்குடியேற்றம் தொடர்பிலான மாகாண கொள்கை உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் 2 வாரங்களுக்குள் ஜனாதிபதியை சந்;தித்து கொள்கையை கையளிப்போம் எனவும் வடமாகாண புனர்வாழ்வு அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள மீள்குடியேற்ற தேவைகள் மற்றும் சில முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான மாவட்ட மட்டத்திலான கூட்டங்களையும் மாகாண மட்டத்திலான கூட்டங்களையும் நடத்தி, மாகாணத்தின் மீள்குடியேற்ற தேவைகள் தொடர்பில் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி, அண்மையில் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர் மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வடக்கின் 5 மாவட்டங்களிலும் நடைபெற்ற மேற்படி கூட்டங்கள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் மேற்கொள்ளப்படும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கின் 5 மாவட்டங்களிலும் மீள்குடியேற்றம் மற்றும் போர் பாதிப்புக்கள், மீள்குடியேறியுள்ள மக்களுடைய தேவைகள் தொடர்பிலான கலந்துரையாடல்களை நடத்தியிருக்கின்றோம். 5 மாவட்டங்களிலும் மாவட்டச் செயலர்களிடமிருந்து மீள் குடியேற்றம் தொடர்பான தகவல்களையும் பெற்றுக்கொண்டிருக்கின்றோம்.
படையினர், பொலிஸார், கடற்படையினர், வைத்திருக்கும் காணிகள் மற்றும் மீள்குடியேறவேண்டிய மக்கள் தொடர்பான தகவல்களை பெற்றிருக்கின்றோம்.
இதனடிப்படையில் மாகாணத்துக்கான மீள்குடியேற்ற கொள்கை ஒன்றை உருவாக்கவேண்டும். அந்தக் கொள்கை உருவாக்கும் பணிகள் முழுமை பெறும் நிலையில் உள்ளன.
2 வாரங்களுக்குள் ஜனாதிபதியை சந்திக்கவும் சந்திப்பின்போது, மாகாண மட்ட மீள்குடியேற்ற கொள்கையினை சமர்ப்பிக்கவும் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தார்.
21 minute ago
27 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
51 minute ago