Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்
ஆனைவிழுந்தான் குளம் மக்கள், வயல் காணி பிரச்சினைக்கு தமது கிராமத்துக்குள் தீர்மானமொன்றை எடுப்பதனூடாக உடனடியாக வயல் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுமென மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், நேற்று செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார்.
ஆனைவிழுந்தான் கிராமத்துக்கு மாவட்டச் செயலாளர் சென்று இக்கிராம மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
'தாங்கள் 1983ஆம் ஆண்டு இக்கிராமத்தில் குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் தங்களுக்கு இதுவரை வயல் காணி வழங்கப்படவில்லை' என கிராம மக்கள் முறைப்பாடு தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த மாவட்டச் செயலாளர், 'ஆனைவிழுந்தான்குளத்தின் கீழ் 400 ஏக்கர் வயல் காணிகள் உள்ளன. தற்போது இக்கிராமத்தில் 320 குடும்பங்கள் உள்ளன. காணிகளை பகிர்ந்தளிப்பதில் பிணக்குகள் காணப்படுகின்றன. கிராமத்திலுள்ள அனைவரும் ஒன்றுகூடி கலந்துரையாடல் மேற்கொண்டு, தீர்மானமொன்றை எடுத்துவிட்டு, மாவட்டச் செயலகத்துக்கு வாருங்கள். ஆவணங்களுடன் வயல் காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு தயாராகவுள்ளோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago
8 hours ago
8 hours ago