2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மகாத்மா காந்தியின் ஜனன தினம்

Editorial   / 2020 ஒக்டோபர் 02 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

மகாத்மா காந்தியின் 151ஆவது பிறந்த தினம், யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியடிகள் நினைவு தூபியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழவில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் போது இந்திய துணைத் தூதுவர் கே. பாலசந்திரன், மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள் மதத் தலைவர்கள் எனப் பலரும் மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமசந்திரன், சரவணபவன், சிவாஜிலிங்கம், மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்க்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திரா பிரகாஷ், யாழ். பல்கலைகழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, காந்தி வழியை பின்பற்றிய மாணவி ஒருவர் கௌரவிக்கப்பட்டதுடன், துணைதூதுவரால் பாரிசிலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .