Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமது மக்கள் எந்தளவு ஆதரவு கொடுக்கின்றனர் என்பதிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் ஆயுள் இருப்பதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது மிகவும் கேள்விக் குறியாகவுள்ளதெனவும் இந்த அலுவலகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப் போவதில்லையெனவும் தெரிவித்தார்.
இந்தப் பணியகத்தினரால் ஒருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் கூட, அவர் குறித்து எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாதெனத் தெரிவித்த அவர், இவர்களால் செய்யக் கூடிய ஒரே ஒரு பணியாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கூடிய பணியை மட்டுமே செய்யக் கூடியதாக இருக்குமெனவும் கூறினார்.
இதேவேளை, ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் போட்டித்தன்மை நிகழ்கின்ற அத்தருணத்தில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள தனிநபர் பிரேரணையானது, உள்நோக்கம் கொண்டே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது இந்த வருடத்திலோ மாகாண சபை தேர்தல் நடைபெற வாய்ப்புகள் இல்லையெனவும், அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago