2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மக்களே இவரை கண்டால் உடன் தகவல் தாருங்கள்...

Freelancer   / 2024 ஜூன் 22 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று நோயாளி ஒருவருடன் சகஜமாக பேசி, அவருடைய மோதிரம், பணம், கைப்பை போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர் தொடர்பில் தகவல் கோரப்பட்டுள்ளது.

குறித்த நபர் சிசிடிவி கமராவின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்த சந்தேகநபர் தொடர்பாக விபரம் தெரிந்தால் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கோ வைத்தியசாலை நிர்வாகத்துக்கோ தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவித்துள்ளார். 

இந்த நோயாளி கடந்த 19ஆம் திகதி சத்திர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் தங்க ஆபரணங்களையோ பெறுமதியான பொருட்களையோ கொண்டு வரவேண்டாம் எனவும் தெரியாத நபர்களுடன் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X