2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மண்டைதீவு மைதானம் புனரமைப்பு பணியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

Janu   / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக்கட்ட புனரமைப்பு பணிகள் கடந்த சனிக்கிழமை  (20) முன்னெடுக்கப்பட்டன. இதன்போது துப்பாக்கி ரவைகள்  கண்டுபிடிக்கப்பட்டன

ஊர் காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  

இந்நிலையில், T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பான தகவல்கள் ஊர்காவற்றுறை  பொலிஸாருக்கு வழங்கப்பட்டது

ரவைகளை மீட்டெடுப்பதற்கான. அனுமதியை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (21)  கோரியதற்கு இணங்க  ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தரவிற்கமைய   ரவைகள் திங்கட்கிழமை (21)  மீட்கப்பட்டன

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர் காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .