2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

மணப்பெண்ணை கடத்தியவர் சரண்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் கடந்த 15ஆம் திகதி திருமணத்துக்கென கனடாவில் இருந்து வந்த பெண்ணை கடத்திய பிரதான சந்தேகநபர், நேற்று திங்கட்கிழமை (21) பருத்தித்துறை நீதிமன்றில் சட்டத்தரணியூடாக ஆஜராகினார்.

அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, திங்கட்கிழமை (21) உத்தரவிட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர், ஏற்கெனவே கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், பிரதான சந்தேகநபரான வரணி பகுதியினைச் சேர்ந்த 28 வயதுடைய தனியார் பேருந்து சாரதி சட்டத்தரணி ஒருவர் ஊடாக நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். 

இச்சம்பவத்தினால் கடந்த 17ஆம் திகதி நடைபெறவிருந்த திருமணம் குழப்பத்தின் காரணமாக நிறுத்தப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .