Freelancer / 2023 மார்ச் 09 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
அச்சுவேலி பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட வளலாய் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி, சிவப்பு மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதியையும் அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று (09) அதிகாலை டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டது. அத்துடன், மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி மற்றும் சவால் என்பனவும் கைப்பற்றப்பட்டன.
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் டிப்பர் வாகனம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
வாகன சாரதிக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (N)
27 minute ago
40 minute ago
49 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
40 minute ago
49 minute ago
56 minute ago