2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

மணல் ஆய்வை முதல்வர் பார்வையிட்டார்

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

மாநகர சபைக்கான புதிய கட்டட நிர்மானப் பணிகள் தொடர்பில் மணல் ஆய்வு நடவடிக்கைகளை, மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட், கடந்த வியாழக்கிழமை (04)  நேரில் சென்று, பார்வையிட்டார்

யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய கட்டடத்தொகுதியை நிர்மாணிப்பது தொடர்பில், யாழ். மாநகர முதல்வர்  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள யாழ். மாநகரசபை கட்டடம் அமைக்கப்படவுள்ள காணியின் மணல் சோதனை வேலைத்திட்டங்கள் தற்பொழுது முன்னெடுக்கப்படுகின்றன. 

மேற்படி மணல் சோதனை திட்டங்களை பார்வையிடுவதற்காகவே, முதல்வர், இந்த கள விஜயத்தை மேற்கொண்டார்.

மணல் ஆய்வின் பின்னர் விரைவாக புதிய கட்டட நிர்மானப் பணிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .