Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம் பகுதியில், நேற்று (06) மாலை 06 மணியளவில், சிவில் உடை அணிந்த உத்தியோகத்தர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சிவில் உடை அணிந்து வந்த இருவர், நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர்.
இதன்போது, சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த இரு உழவு இயந்திரங்களை, அவர்கள் வழிமறித்த போது, சாரதிகள் வாகனத்தை நிறுத்தாது தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது, அவ்விருவரும் வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இருந்த போதும், சாரதிகள் வாகனத்துடன் தப்பியோடியுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு தொடர்பில், எந்த தரப்பினர் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
1 hours ago