2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம் ; அமைச்சர் கள விஜயம்

Janu   / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பாக  இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட குழுவினர் கள விஜயமொன்றை வியாழக்கிழமை (10) மேற்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான சனத் ஜயசூரிய குறித்த விஜயத்தில் பங்கேற்றார்.

மண்டைதீவுக்கு விஜயம் செய்த குழுவினர் மைதானம் அமைப்பது தொடர்பான நிலைமைகளை ஆராய்ந்தனர்.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், விளையாட்டு திணைக்களத்தின் அதிகாரிகள், பிரதேச செயலாளர், இராணுவத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

நிதர்ஷன் வினோத் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X