Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மே 08 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
இரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - அளவெட்டி மத்தியை சேர்ந்த கந்தசாமி நடராசா (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மண்ணெண்ணெய் வாங்குவதற்காக அளவெட்டி - மல்லாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளார்.
சில மணி நேரத்தில் மண்ணெண்ணெய் முடிந்து விட்டது என ஊழியர்கள் அறிவித்தனர். அதனால் அவருக்கு மண்ணெண்ணெய் கிடைக்காமலே வீடு திரும்பி இருந்தார்.
நேற்றைய தினம் மீண்டும் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளார். அவர் அருகில் சென்றதும் மண்ணெண்ணெய் முடிவடைந்து விட்டது என ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதனால் கடும் மனவிரக்தியுடன் வீடு திரும்பியவர், மனைவியிடம் இன்றும் தன்னால் மண்ணெண்ணெய் வாங்க முடியவில்லை என கவலையுடன் கூறி படுத்தவர் , சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளார். (R)
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago