2025 ஜூலை 30, புதன்கிழமை

மதுபோதைக்கு அடிமையாகிய நபருக்கு மதுவெறுப்பு சிகிச்சை

Sudharshini   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

போதைப்பொருளுக்கு அடிமையாகி, சிறுகுற்றங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த வல்வெட்டித்துறை வன்னிச்சையம்மன் கோயில் பகுதியினைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரை, சமூதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தின் ஊடாக மதுவெறுப்பு சிகிச்சைக்கு உட்படுத்துமாறு பருத்தித்துறை மாவட்ட நீதபதி மாணிக்கவாசகர் கணேசராஜா வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டார்.

சந்தேகநபரின் உடல் நலத்தை கவனத்திற் கொண்ட நீதவான் சாவகச்சேரியில் அமைந்துள்ள குருந்தகத்தில் அனுமதித்து, மதுவெறுப்பு சிகிச்சைக்கு உட்படுத்துமாறு சமூதாய சீர்திருத்த அதிகாரிக்கு கட்டளை பிறப்பித்தார்.

இவர் ஏற்கனவே சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மதுபோதையில் வீட்டிலுள்ள அனைவரையும் அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைசெய்யப்பட்டிருந்த மேற்படி நபரை, மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கபட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .