Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், சின்னக்கடை பகுதியில், சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்த நபரை, இன்று (03) யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் இணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மது ஒழிப்பு தினமான இன்றைய தினம் மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், சின்னக்கடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களான வை.கிருபாகரன், ஜெ. ரஜிவ்காந், ஜெனன் மற்றும் ம.மயூரன் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த உறுப்பினர்கள், அங்கு விசாரணைகளை முன்னெடுத்தபோது, மாநகர சபையின் வரி அறவிட்டு உத்தியோகஸ்தர்களும் உடன் இருந்துள்ளனர்.
அதன் பின்னர் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற நபரை பிடித்ததுடன், அவரிடம் இருந்து 250 மில்லி லீட்டர் கொள்வனவு உடைய 13 சாராய போத்தல்களையும் மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சாராய போத்தல்களையும் பிடிபட்ட நபரையும் யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .