2025 ஜூலை 02, புதன்கிழமை

மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தியவருக்கு அபராதம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்தியமை மதுபோதையில் சாரத்தியம் செய்தமை உள்ளிட்ட குற்றங்களை புரிந்த ஒருவருக்கு 77 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (19) உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

மதுபோதையில் சாரத்தியம் செய்தமை, சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப் பத்திரம், வாகன வரி அனுமதிப்பத்திரம் ஆகியவையின்றி வாகனம் செலுத்தியமை ஆகிய நான்கு குற்றச்சாட்டுக்களை சாரதிக்கு எதிராக பொலிஸார் முன்வைத்தனர்.

வழக்கு, நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சாரதி குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்.

மதுபோதையில் சாரத்தியம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை ஆகிய 3 குற்றங்களுக்கும் தலா 25 ஆயிரம் ரூபா வீதம் 75 ஆயிரம் ரூபாயும் வாகன வரி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமைக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயுமாக மொத்தம் 77 ஆயிரத்து 500 ரூபாயை குற்றவாளி தண்டமாகச் செலுத்தவேண்டுமென, நீதவான் உத்தரிவட்டார்.

தண்டப்பணத்தில் ஒரு பகுதியான 38 ஆயிரத்து 750 ரூபாயை நேற்றைய தினமும் மற்றைய பகுதியான 38 ஆயிரத்து 750 ரூபாயை வரும் 23ஆம் திகதியும் செலுத்தி முடிக்கவேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .