Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 15 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
யாழ் இளவாலைப் பகுதியில் உதைபந்தாட்ட மத்தியஸ்தர் மீது நேற்றிரவு (14) வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, எஸ்.ஜெயக்குமார் என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளவாலை விளான் சந்தியூடாக, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மேற்படி மத்தியஸ்தரை, பின் தொடர்ந்து வந்த ஒரு குழுவினரே வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மேலும் உதைபந்தாட்டத்தின் போது ஏற்பட்ட முரண்பாடே மத்தியஸ்தர் மீதான தாக்குதலாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .