Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில் 1999ஆம் ஆண்டு செம்டெம்பர் 15ஆம் திகதியன்று, இலங்கை விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுடைய 23ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு, இன்று (15) நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நினைவு நிகழ்வை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை அமைதியான முறையில் உயிரிழந்தவர்களை நினைவிற்கொண்டுள்ளார்கள்.
குறிப்பிட்ட இடத்தில் பொதுச்சுடரை, உயிரிழந்த உறவுகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏற்றியுள்ளதை தொடர்ந்து, மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.
உயிரிழந்த மக்களின் நினைவு நிகழ்வை மேற்கொள்ள எதிர்காலத்திலும் அரசாங்கம் அனுமதிக்கப்படவேண்டும் என்று நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டதுடன், குடத்தனை வடக்கு உதவும் உறவுகள் அமைப்பினால் தாக சாந்தியும் வழங்கிவைக்கப்பட்டது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago