2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மனநோய் சிகிச்சைக்கு உட்படுத்துமாறு உத்தரவு

Sudharshini   / 2015 நவம்பர் 17 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

மனநோயினால் பாதிக்கப்பட்டு இரவு நேரங்களில் அநாதரவாக வீதிகளில் சுற்றித்திரிந்த நபரை, சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் மனநல சிகிச்சைக்கு உட்படுத்துமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் எஸ்.சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (17) உத்தரவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை (15) இரவு வீதி ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், ஏழாலை பகுதியில் வைத்து குறித்த நபரை கைது செய்து விசாரணை செய்த போது அவர் மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அந்நபரை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, மனநல வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்த உத்தரவிட்ட நீதவான், அதன் அறிக்கையினை எதிர்வரும் 30ஆம் திகதி மன்றில் சமர்பிக்குமாறு பணித்தார்;.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .