2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மனித பாவனைக்கு உதவாத பழப்புளி

Freelancer   / 2022 ஒக்டோபர் 26 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். நகர்ப் பகுதியில் மனித பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை விற்பனைக்கு தயார் செய்து கொண்டிருந்த போது பொதுச்சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகர பொதுச் சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய யாழ். மாநகர பொதுச்சுகாதார பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் 6,000 கிலோகிராம் வரையான மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை சுகாதாரமின்றி பொதியிட்டுக் கொண்டிருந்த நிலையில், நேற்று மாலை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவினரால் குறித்த களஞ்சியம் முற்றுகையிடப்பட்டது.

மனிதப் பாவனைக்கு உதவாத நிலையில் 6,000 கிலோ கிராம் வரையிலான பழப்புளி கைப்பற்றப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X