2025 மே 21, புதன்கிழமை

மன்னார் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் சதொச வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகளின் அகழ்வுப் பணிகள், ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, நேற்று (13) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்துக்கு, குறித்த அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை (10) மதியம் வரை, குறித்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், 52 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 66 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றில், 56 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த அகழ்வுப் பணிகள், சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்களில் மாத்திரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, நேற்று (13) முதல், ஒரு வார காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம், இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனினும், குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .