2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மயிலிட்டி மீள்குடியமர்வு தொடர்பில் அறிக்கை சமர்பிக்க பிரதமர் உத்தரவு

Niroshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மயிலிட்டி பகுதியில் மக்களை மீள குடியமர்த்தல் தொடர்பில் யாழ். மாவட்ட செயலாளரும் பிரதேச செயலாளர்களும் இணைந்து ஓர் அறிக்கையை சமர்பிக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சனிக்கிழமை (30) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் மீள் குடியமர்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பலாலியில் வைத்து யாழ். மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடும்போது, உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மயிலிட்டி பகுதிக்கு மக்களை மீள் குடியேற்றவேண்டும்.

ஆனால், இங்குள்ள துறைமுகம் விஸ்தரிக்கப்படுதல் தொடர்பான விடயம் உள்ளமையால், இப்பகுதி மக்கள் தற்போது எந்த நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனரோ அந்த மக்களையும் அதற்குரிய பிரதேச செயலாளர்களையும் இணைத்து கலந்துரையாடி ஒரு முடிவை எடுங்கள். மக்கள் அங்குதான் குடியேற உள்ளனரா அல்லது மாற்று இடங்களில் குடியேற ஏற்றுக்கொள்கிறார்களா. எதுவானாலும் மக்களின் முடிவாக அமையட்டும் என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.

எனவே, அதனை உடனடியாக செயற்படுத்துங்கள். அப்பகுதி மக்கள் பருத்தித்துறை, கோப்பாய் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்ப்பட்ட நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றனர். ஆகவே, உடனடியாக அந்தந்த பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளருடன் இணைந்து கூட்டத்தை கூட்டி மக்களின் நிலை என்ன என்ற அறிக்கையை விரைந்து தாருங்கள் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X