2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘மயானத்தை மீள கையளிக்கவும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஆசைப்பிள்ளை செம்பாட்டு மயானத்தை, மீள கையளிக்குமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

எழுதுமட்டுவாழ் வடக்கில், ஆசைப்பிள்ளை (ஆசைப்பிள்ளை ஏற்றம்) என்பவர் தனது காணியில், 30 பரப்பளவை மயானத்துக்கு வழங்கி இருந்தார். 

குறித்த மாயனத்தை, கடந்த 50 வருட காலத்துக்கும் மேலாக எழுமட்டுவாழ் தெற்கு, வடக்கு, கரம்பகம் மற்றும் மிருசுவில் வடக்கு ஆகிய கிராம சேவகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். 

இந்நிலையில், கடந்த 2000ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக அப்பகுதிணைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். 

பின்னர் மீண்டும் 2011ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர். அதன்போது, “ஆசைப்பிள்ளை ஏற்றம்” என அழைக்கப்படும் எழுமட்டுவாழ் பகுதியில், ஆசைப்பிள்ளைக்கு சொந்தமான காணியை, இராணுவத்தினர் சுவீகரித்து பாரிய இராணுவ முகாமை அமைத்துள்ளனர். 

ஆசைப்பிள்ளையால் மயான பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட காணியையும் சுவீகரித்தே இராணுவ முகாம் அமைக்கபட்டுள்ளது. 

இதனால், கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் வேறோர் இடத்திலேயே தகன கிரியைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மயானம் அமைந்துள்ள காணியை மீள ஒப்படைக்குமாறு, அப்பகுதி மக்கள் பல தடைவைகள் இராணுவத்தரப்பிடம் கோரிக்கை விடுத்த போது, அங்கு மயானம் இருந்தது தமக்கு தெரியாது என கூறி வருகின்றனர். 

இந்நிலையில், தமது மயானத்தை இராணுவத்தினரிடம் இருந்து மீட்டு தர சம்பந்தப்ப்பட்டவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .