2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மருதனார்மடம் பொதுச்சந்தையின் இட ஒதுக்கீட்டு கலந்துரையாடல்

Gavitha   / 2020 நவம்பர் 04 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

வலி. தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தையின் புதிய கட்டடத் தொகுதியில், வர்த்தகர்களுக்கான இட ஒதுக்கீட்டில் காணப்படும் முரண்பாடு தொடர்பில் இன்று (04) ஆராயப்பட்டது.

மருதனார்மடம் பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சந்தைக் கட்டடத் தொகுதியில், வர்த்தகர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பில், கடந்த இரண்டு வாரங்களாக வியாபாரிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதுதொடர்பில் யாழ். மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், வலி தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் லகிந்தன், யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், மனிப்பாய் பிரதேச அமைப்பாளர் வீரா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், சந்தை வர்த்தகர்களுடன் கலந்துரையாடினர்.

பிரதேச சபையால் வழங்கப்படவுள் இடத்தின் அளவீடு, தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னெடுப்பதற்கு போதுமானதாக இல்லை என்று, இதன்போது வர்த்தகர்கள் குற்றஞ்சாட்டினர்.

வியாபாரிகளின் பிரச்சினை தொடர்பில் சபையின் கவனத்துக்குக் கொண்டு வருவதாகவும் தவிசாளரால் தீர்வு வழங்கப்படவில்லை எனில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .