2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

’மருத்துவ அறிக்கையைப் பெற வரிசையில் நிற்கத் தேவையில்லை’

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், என்.ராஜ், எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான மருத்துவ அறிக்கையைப் பெறுபவர்கள், இனி வரிசையில் நிற்க வேண்டியதில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கும் இடத்துக்கு, இன்று (19) காலை விஜயம் மேற்கொண்ட அங்கஜன் எம்.பி, அங்குள்ள நிலமைகளை நேரில் அவதானித்ததுடன், மருத்துவச் சான்றிதழ் வழங்குவதை சுலபமாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தார்.

இதையடுத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், தாமும் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்திய பரீட்சார்த்த நடவடிக்கையின் பிரகாரம், தேவையான விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்கு, திகதி கொடுக்கப்படுமெனவும் அந்தத் திகதியில் வருகை தந்து, மருத்துவச் சான்றிதழைப் பெறலாமெனவும் கூறினார்.

இதற்கு, வைத்தியர்கள், ஆய்வுகூட உதவியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட உள்ளனரெனவும், அங்கஜன் எம்.பி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .