2025 மே 10, சனிக்கிழமை

மறைக்கல்வி வாரம் அனுஷ்டிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

"மறைதூதுப் பணியான மறைக்கல்வியை நோக்கிப் பயணிப்போம்" எனும் தொனிப்பொருளில், எழுவைதீவு  பங்கில் மறைக்கல்வி வாரம், 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, மறைக்கல்வி சார்ந்த பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதோடு, மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு திருப்பலிகள், மறைக்கல்வி வேதாகம போட்டிகள்,   விளையாட்டுப் போட்டி, பட்டமேற்றல் போட்டி,  மாணவர்களுக்கான வினோத உடைப்போட்டி போன்றன இடம்பெற்றன.

இந்நிகழ்வுகள்  பங்குத்தந்தை அருட்திரு எரோனியஸ்  அவர்களின் நெறிப்படுத்தலில்,  மறையாசிரியர்கள் மற்றும் இளையோரின்  உதவியுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X