Freelancer / 2022 ஒக்டோபர் 20 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த 32, 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50, 60 மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .