2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மழை வெள்ளம் புகும் கடைகளுக்கு ரூ.17 ஆயிரம் வாடகை

Sudharshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

மழை வெள்ளம் புகும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு 17 ஆயிரம் ரூபாய் வாடகையை யாழ்;ப்பாணம் மாநகர சபை அறவிட்டு வருகின்றது.

தீபாவளி கொண்டாட்டத்துக்கான விற்பனைக்காக பெருமளவு வெளிமாவட்ட வியாபாரிகள் யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கைகளுக்காக வருகை தந்துள்ளனர். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாகவும் முற்றவெளி நூலகத்துக்கு அருகிலும் கடைகளை அமைப்பதற்கு அவர்களுக்கு யாழ்;ப்பாணம் மாநகர சபை அனுமதி வழங்கியிருந்தது.

10 அடி கொண்ட கடைகளை 3 நாட்கள் போடுவதற்கு 17 ஆயிரம் ரூபாயை யாழ்ப்பாணம் மாநகர சபை அறிவிடுகின்றது. ஞாயிற்றுக்கிழமை (08) முழுவதும் யாழ்;ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக மேற்படி இடங்களில் வெள்ளநீர் தேங்கி நின்று, வியாபார நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளானதென வியாபாரிகள் தெரிவித்தனர்.

தாம் செலுத்திய வாடகை பணத்தையாவது இந்த வியாபார நடவடிக்கையின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமா என்பது சந்தேகத்துக்குரிய விடயம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .