Freelancer / 2022 நவம்பர் 01 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்நிலப் பகுதிகளில் இருக்கின்ற மக்களின் வீடுகள் கடைகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதோடு உரிய வடிகாலமைப்பு இல்லாமையால் வெள்ளம் வடிந்தோடாமல் இருப்பதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உரிய வடிகாலமைப்பு இல்லாமையால் கடைகள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இதனை விட தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலை தொடருமானால் அதிக பாதிப்புகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். (a)


9 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
57 minute ago
1 hours ago