Janu / 2024 ஏப்ரல் 04 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர், வியாழக்கிழமை (04) அதிகாலை 3 மணியளவில் பொலிஸ் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிரடி படையினரால் , பண்ணை சுற்றுவட்ட பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வாகனமொன்றை வழிமறித்து சோதனையிட்ட போது , வாகனத்தினுள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 08 மாடுகள் காணப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து வாகனத்தில் இருந்த மூவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, அதில் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் எனவும் குறித்த மூவரும் புங்குடுதீவு பகுதிக்கு வாகனத்தில் சென்று மாடுகளை களவாடி அவற்றின் கால்களை கட்டி , கொடுமைப்படுத்தும் முகமாக வாகனத்தில் ஏற்றி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும் , அதிரடி படையினரால் குறித்த மூவரையும் கைது செய்துள்ளதுடன் மாடுகள் மற்றும் வாகனத்தினையும் மீட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
எம்.றொசாந்த்

4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago