2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மாணவன் தாக்குதல் ; உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

Janu   / 2024 பெப்ரவரி 27 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் .நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் இணைந்துக்கொண்ட புதுமுக மாணவன் மீது தரம் பத்து மாணவனால் கடந்த 22 ஆம் திகதி   மேற்கொள்ளப்பட்ட   தாக்குதல்  சம்பவம்   தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார் .

அதற்கமைய   இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு பாடசாலை அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிமனைக்கு  ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் பிரிவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் மாணவன் ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக நெல்லியடி மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளதுடன்  , பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரை  ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் பிரிவினால் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என  தெரியவந்துள்ளது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X