Janu / 2026 மார்ச் 09 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்குப் படகு மூலம் கடத்தப்படவிருந்த சுமார் 8 கிலோவிற்கும் அதிக எடையுடைய தங்கக் கட்டிகளை இலங்கை கடற்படையினர் திங்கட்கிழமை (09) கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கடற்படையினர் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:
மாதகல் கடற்பரப்பினூடாக இந்தியாவிற்குத் தங்கம் கடத்தப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த படகொன்றை நடுக்கடலில் வைத்து கடற்படையினர் வழிமறித்துச் சோதனையிட்டனர்.
குறித்த படகிலிருந்து 8 கிலோ 865 கிராம் எடையுடைய தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன.
படகில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடத்தப்பட்ட தங்கத்தின் சர்வதேச சந்தை பெறுமதி பல கோடிகளைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சுங்க அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago