2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

மினி சூறாவளியால் 19 குடும்பங்கள் பாதிப்பு

Editorial   / 2022 ஜனவரி 19 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

யாழ்ப்பாணம், கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

கரணவாய் பகுதியின் ஜே348 மற்றும் ஜே350 பிரிவுகளிலேயே இந்தச் சேத விவரங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திடீரென பெய்த மழை காரணமாக 119.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .