2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி

Editorial   / 2018 மே 23 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் கரவெட்டி கரணவாய் கிழக்குப் பகுதியில் வீட்டின் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜெகனாந்தன் (வயது -50) சஞ்சீவன் (வயது29) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

வீட்டில் உள்ள ரி.வி தொடர்பு பழுதடைந்தமையால் தொடர்பினை பொருத்த முற்பட்டபோது, மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .