2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மீனவரைக் காணவில்லை: படகு மீட்பு

Freelancer   / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

பலாலி, அன்ரனிபுரம் பகுதியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற  நான்கு பிள்ளைகளின் தந்தையான இராஜப்பு ரொபர்ட் கென்னடி (வயது 54) என்ற மீனவர் காணாமல்போய் உள்ளதாக  பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் குறித்த நபர் தனியாக மீன் பிடிக்க சென்றுள்ளார். மாலையாகியும் கரைக்கு திரும்பாத நிலையில் சக மீனவர்கள் தேடியுள்ளனர். இதன்போது கரையில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் குறித்த மீனவரின் படகு கடலில் கவிழ்ந்திருந்த நிலையில் காணப்பட்டது. 

மீன்பிடி படகும் இயந்திரமும் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. காணாமல் போன மீனவரை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் கடற்படையினர் காணாமல் போன மீனவரை தேடும் பணிக்கு ஒத்துழைப்பு தரவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X