2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தில் ஏற்பாட்டில், வட பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் தொழில் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி, மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் இன்று (01) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலபதி, மாத்தறை மாகாண சபை உறுப்பினர் ரத்தின கமமே உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளால், மாவட்டச் செயலாளர் கே.ஏ.மோகன்ராஸிடம் மகஜர் கையளிக்கப்பட்டது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .