Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
வடமராட்சி பருத்தித்துறை கடலில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களையும் விடுவிப்பதற்கு கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் வர வேண்டும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வடமராட்சி பருத்தித்துறை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.
மீனவர்களை விடுவிக்குமாறு கோரி நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ச்சியான போராட்டத்தையும் மீனவர்கள் ஆரம்பிக்கவுள்ளனர்.
வடமராட்சி கிழக்கில் அத்து மீறி சட்ட விரோதமாகத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் நேற்றிரவு வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்புக்குள் நுழைந்தபோது வடமராட்சி பருத்தித்துறை மற்றவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸார், பிரதேச செயலர், மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளர், மீனவர்களுக்கிடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற்றது.
ஆனாலும் மீனவர்களை விடுவிக்கும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது தொடர்ந்தும் தாம் பாதிக்கப்பட்டு வருவதற்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்றும் கடற்தொழில் பணிப்பாளர் நேரடியாக வருகை தர வேண்டுமென்றும் ஐந்து கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.
ஆயினும் அந்தப் கோரிக்கைக்கு சாதகமான பதில் அல்லது முடிவு கிடைக்காத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள கொள்ளப்பட்டு அதனை நிறைவேற்றும் வரையில் தாம் கடலுக்கு செல்லக் போவதில்லை எனத் தெரிவித்துள்ள மீனவர்கள் கொட்டகைகளை அமைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago