2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மீனின் பெறுமதி ஒன்றரை கோடி

Editorial   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மயூரப்பிரியன்

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில், கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு, நேற்று (17), 20 ஆயிரம் கிலோ மீன்கள் அகப்பட்டு உள்ளன. வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே, இவ்வாறு மீன்கள் அகப்பட்டுள்ளன. 

குறித்த மீன்கள் பாரை இனத்தை சேர்த்தவைகள் எனவும், அவற்றின் இன்றைய சந்தை பெறுமதி, சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று மட்டும், குறித்த மீனவரிடம் இருந்து, 30 இலட்சம் ரூபாய்க்கு மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X