Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 02 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
வலி. வடக்கு, தையிட்டி பகுதியில் நடைபெற்று வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை, வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரன், அண்மையில் (29) நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
கால் நூற்றாண்டு கடந்த இடப்பெயர்வு காலவெளியில், தன்னியல்பாகக் குடிப்பரம்பலில் ஏற்படும் அதிகரிப்புக் காரணமாக, சொந்தமாக காணிகள் இல்லாததுடன், தற்காலிக முகாம்களில் வசித்து வந்த மயிலிட்டியைச் சேர்ந்த 38 குடும்பங்களின் மீள்குடியேற்றத்துக்காக, தையிட்டி பகுதியில் விடுவிக்கப்பட இடத்தில் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இவ்வாறு அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளை அளவீடு செய்யும் பணி, கடந்த 29ஆம் திகதி நடைபெற்றது. அப்போது, அங்கு சென்ற அமைச்சர், மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அத்துடன், அத்தியாவசியமாகத் தேவைப்படும் குடிநீர் கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளை உடனடியாகச் செய்து கொடுப்பது குறித்து அங்கிருந்தவாறே உரிய அதிகாரிகளுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆலோசனை வழங்கினார்.
இதையடுத்து, மீள்குடியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மக்கள், தமது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றித்தருமாறு, அமைச்சரிடம் கோரிக்கை கடிதம் கையளித்திருந்தனர்.
இது தொடர்பாக, கடந்த 29ஆம் திகதி மாலை நடைபெற்ற வட மாகாண அமைச்சர் வாரியக் கூட்டத்தின் போது, முதலமைச்சருக்குத் தெரியப்படுத்தியதுடன், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
33 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago