2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மீள்குடியேற்றத்துக்கான வசதிகள் கிடைக்காதவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

க. அகரன்   / 2018 மே 23 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

“1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியேற்றத்துக்கான வசதிகள் கிடைக்காதவர்கள் கிராம சேவகரூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு” மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு இன்று (23) அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில்,

“நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக வடக்கு மாகாணத்திலிருந்து 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் தமது பூர்வீக இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்காக விசேட செயலணியொன்று மீள்குடியேற்ற அமைச்சினால் கடந்த 2016ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரத்துடன் நிறுவப்பட்டது. இடம்பெயர்ந்தவர்கள்; மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு வசதியாக வீட்டுத்திட்டம்இ உட்கட்டுமான அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்குவதே இந்த செயலணியின் நோக்கமாகும். எனினும் துரதிஸ்ரவசமாக இந்த செயலணியின் திட்டத்தில் இதுவரையில் தமிழ் மக்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பபெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து இம்மாதம் 16ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை அவரது அமைச்சில் சந்தித்து கலந்தரையாடியிருந்தேன். இந்த சந்திப்பின்போது நீண்டகாலத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்த தமிழ் மக்களையும் இத்திட்டத்தில் உள்வாங்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தேன். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அதற்கு ஒப்பதல் வழங்கியிருந்தார்.

இதனடிப்படையில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரினால் வடக்கு மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறுவுறுத்தல் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் முடிவுத்திகதி எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியேற்றத்துக்கான வசதிகள் கிடைக்காதவர்கள் உங்கள் பகுதி கிராம சேவகர்களிடம் விண்ணப்படிவங்களை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .