Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூன் 28 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
பொது நிகழ்வொன்றில், வடமாகாண ஆளுநர் திருமது பி.எஸ்.எம். சார்ள்ஸ் முககவசம் அணியாமல் கலந்துகொண்டிருந்தமை, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்துக்கு நேற்று (27) வருகை தந்திருந்த நிலையில், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார். அத்துடன், யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
இதன் போது, இந்நிகழ்வுகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது, வடமாகாண ஆளுநர் கலந்துகொண்டமையை அவதானிக்க முடிந்தது.
முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன். முகக் கவசங்களை சரியான முறையில் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பொது நிகழ்வொன்றில், முகக் கவசம் அணியாது ஆளுநர் கலந்து கொண்டுள்ளமை தொடர்பில், பொலிஸாரோ , சுகாதார பிரிவினரே எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பலரும் விசனம் தெரிவித்தனர்.
38 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago