Editorial / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
முந்தல், கீரியங்கல்லி - ஆன்டிகம பிரதான வீதியில், நேற்று (03) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளாரென, முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது, மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில், நேற்று முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி இன்று (04) உயிரிழந்துள்ளாரென தெரிவித்துள்ளானர்.
ஆன்டிக பகுதியில், பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியே, இவ்விபத்து சம்பவித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில், ஆன்டிகம - கஜூவத்த பகுதியைச் சேர்ந்த, நிரோஷன் பீரிஸ் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு, உயிரிழந்த நபரின் சடலம் முந்தல் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியை கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளையும் முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago